முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி தி.மு.க.விற்கு இல்லை: திருச்சி கூட்டத்தில் முத்துமணி பேச்சு

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத் தெரு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

மாணவரணி செயலாளரும் ஆவின் தலைவருமான எஞ்சினியரிங் கார்த்திகேயன் பொதுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்புரையாளர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தலைமைகழக பேச்சாளரும் முன்னாள் டெல்லி மேல்சபை எம்.பி.யுமான முத்துமணி, முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் முன்னாள் எம்.பி முத்துமணி பேசியதாவது:- உலகத்திலே தொன்மையான மொழி தமிழ் மொழி தமிழகத்தில் இந்தி மொழி எதிர்ப்புக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நபர்கள் இந்த மொழிப் போர் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் இழந்தனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை தவிர எந்த கட்சிக்கும் மொழிப்போர் வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் தகுதி இல்லை. மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இந்த நாள். முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழக சாலைகளில் மைல்கல்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது. எனவே இந்தி மொழியை தமிழகத்தில் வளர்த்த பெருமை தி.மு.க.வையே சாரும். ஏற்கனவே இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் 50 ஆண்டுக்கு முன்பு போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது.

அப்போது தி.மு.க.வின் குடும்பத்தினர் மறைமுகமாக தமிழகத்தில் இந்தி வளர்வதற்கு உறுதுணையாக இருந்தார்கள் . குறிப்பாக ஸ்டாலின், கனிமொழி, அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்கள் தங்களது பேரப்பிள்ளைகளை இந்தியில் படிக்க வைத்தனர் என்ற செய்தி அப்போதே எல்லாருக்கும் தெரிந்தது. தமிழகத்தில் ஏராளமான மொழிப்போர் தியாகிகள் இன்னுயிரை நீத்தனர். அவர்களை வாழ்வில் மறக்க முடியாது.

இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து