முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகமே பாராட்டும் வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா : முதல்வர் எடப்பாடி பேச்சு

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : உலகமே பாராட்டும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்து சாதனைகளை படைத்தவர் அம்மா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–

புரட்சித் தலைவி அம்மா 1948–ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி இந்த மண்ணிலே பிறந்து இயக்கத்தையும் தமிழ்நாட்டின் மக்களையும் காப்பதற்காக இறைவன் கொடுத்த கொடை புரட்சித் தலைவி அம்மா. 

அம்மா சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பை சிறப்புடன் முடித்தார். சிறு வயதிலிருந்தே கலையில் ஆர்வமும் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். பரதநாட்டியத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர்.

பல்வேறு மொழிகளிளே பேசக்கூடிய ஆற்றல் மிக்கத் தலைவி புரட்சித் தலைவி அம்மா. தமிழ்த்திரை உலகில் ‘‘வெண்ணிற ஆடை” படம் மூலம் அறிமுகமானார். திரைக்காவியங்களில், தான் ஏற்ற பாத்திரங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடத்தில் தனக்கென இடம் பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைத்துறைக்கு தான் அளித்த சிறப்பான பங்களிப்பினால் கலைமாமணி, பிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் நம்முடைய அம்மா. கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தியபோது, அத்திட்டத்தின் உயர்மட்டக் குழுவில் அம்மாவை உறுப்பினராக நியமித்து அந்தத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அடிக்கல் அமைத்தவர் அம்மா. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மாவை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு, அம்மா தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கழகத்திற்கு வளர்ச்சியை தேடித் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா.

1984-ல் அம்மாவை மக்களவை உறுப்பினராக புரட்சித்தலைவர் நியமனம் செய்தார். மக்களவையில், புரட்சித் தலைவி அம்மாவின் வாதத் திறமையைக் கண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மாவை வெகுவாகப் பாராட்டினார். 1989 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் புரட்சித் தலைவி அம்மா.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் நமது இயக்கத்தினை 1989–ல் ஒருங்கிணைத்து, கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்று கழகத்தை வழிநடத்தியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 15 1/2 ஆண்டு காலம் ஆட்சி புரிந்து, வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தவர் புரட்சித் தலைவி அம்மா.

ராணுவ கட்டுக்கோப்போடு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி, பெண்குலத்திற்கே பெருமை சேர்த்தவர், இரும்பு மங்கை என்று பெயர் பெற்றவர், எதிரிகளாலும் தைரியசாலி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் புரட்சித் தலைவி அம்மா. 

ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்மாதிரி திட்டங்களைச் செயல்படுத்தியவர் அம்மா. இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதலமைச்சர் என்ற சாதனையைப் படைத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர் அம்மா.

‘‘மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்று அல்லும்பகலும் மக்களுக்காகவே சிந்தித்து செயலாற்றி வெற்றி கண்டவர் புரட்சித் தலைவி அம்மா. 69 சதவிகித இடஒதுக்கீட்டினை செயல்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டி, சமூக நீதி காத்த வீராங்கனை” அம்மா. தமிழ்நாட்டிற்கான காவேரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, நீதிமன்றம் மூலமாக அரசிதழில் வெளியிட தொடர்ந்து போராடி வெற்றி கண்டு, காவேரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திய ‘‘பொன்னியின் செல்வி” அம்மா.

அதுமட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டவரும் புரட்சித் தலைவி அம்மா. சென்னை நகரின் குடிநீர் பிரச்சனைக்காக புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா.

புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் உலகளவில் பாராட்டைப் பெற்றன. அதை பலர் தங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினர். பெண் சிசுக்களைக் காக்க தொட்டில் குழந்தைகள் திட்டம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்று புரட்சித் தலைவி அம்மா கொண்டு வந்த அம்மா உணவகம், ஏழை மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, அரிசி, மடிக்கணினி, மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், சீருடை, தாய்-சேய் பெட்டகம் என பல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் வாழ்வில் ஏற்றம் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து