முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்ற போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதியில் இருந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர்.

இதற்கு டெல்லி போலீசாரும் அனுமதி அளித்தனர். 3 வழிகளில் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் விவசாயிகளின் ஒரு குழுவினர் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைந்தனர்.

செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் அங்குள்ள கோபுரத்தில் விவசாய கொடிகளையும், சீக்கிய கொடிகளையும் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். விவசாயிகளும் காயம் அடைந்தனர். பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக டெல்லி போலீஸ் அதிகாரி அனில் மிட்டல் தெரிவித்துள்ளார். வன்முறையின் போது 17 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இணைய சேவைகளை நிறுத்தியதுடன், வன்முறை வெடித்த பின்னர் மெட்ரோ ரெயில் நிலையங்களையும் மூடினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை அதாவது 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, டெல்லி மற்றும் உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து