முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை ஆனார்: 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து நேற்று சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்றால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா 31–ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து கொரோனா தொற்றால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா இருக்கும் வார்டுக்கு சிறை அதிகாரிகள் முழு கவச உடை அணிந்து சென்றனர்.

விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெற்றனர். இதன் மூலம் அதிகாரபூர்வமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான பத்திரத்தை சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் கேசவ் மூர்த்தி வழங்கினார். இதன் நகல் ஒன்றை, சிறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கி சசிகலா தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தனர். அவரது போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது.

தண்டனைக் காலம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள், விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தண்டனை அனுபவிக்க தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 

இதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. அதே நேரத்தில் கட்சி பதவிகளை வகிக்க எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து