ராஜஸ்தானில் 17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இடங்களில் பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதா? என சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்து இருந்தது. கொரோனா வைரசுக்கு மத்தியில் பறவை காய்ச்சலும் பரவி வருவதால் நீர்நிலைகள், பண்ணைகள், விலங்குகளின் சரணாலயங்கள் மற்றும் பறவைகள் தொடர்பான சந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் சுமார் 7 ஆயிரம் பறவைகள் பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளன. அங்குள்ள 17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெய்ப்பூர் அருகே சில பகுதிகளில் காகங்கள், மயில்கள், புறாக்கள் உள்ளிட்டவை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.