முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர்

சனிக்கிழமை, 30 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. 

வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் அதே வேளையில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. 

கொரோனா பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதை நினைத்து நான் அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

வாய்ப்புகளைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். தடுப்பூசி எல்லா இடங்களிலும் எல்லாருக்கும் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து