முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டு நடுவர்கள் நியமனம்

சனிக்கிழமை, 30 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில் முழுக்க முழுக்க உள்நாட்டு நடுவர்களே பணியாற்ற இருக்கிறார்கள். இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் சவுத்ரி, நிதின் மேனன் முதலாவது டெஸ்டுக்கும், வீரேந்தர் ஷர்மா, நிதின் மேனன் 2-வது டெஸ்டுக்கும் கள நடுவர்களாக பணியாற்ற இருக்கிறார்கள்.

‘ஐ.சி.சி. எலைட் பேனல்’ என்ற உயரிய நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் நிதின் மேனன் தவிர மற்ற இருவரும் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் நடுவராக செயல்பட்டதில்லை. 

முதலாவது டெஸ்டில் ஷம்சுதினும், 2-வது டெஸ்டில் அனில் சவுத்ரியும் 3-வது நடுவர் பணியை கவனிப்பார்கள். போட்டி நடுவராக ஜவஹல் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் நடுவர்கள் வெளிநாட்டிற்கு பயணிப்பது கடினமாக இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து