முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியின் சாதனை நழுவியது

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கவுகாத்தி அணியில் டேஷோர்ன் பிரவுன் 6-வது மற்றும் 9-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மும்பை சிட்டி தரப்பில் 85-வது நிமிடத்தில் ஆடம் லே பான்ட்ரோ கோல் திருப்பினார்.

கடந்த 12 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத மும்பை சிட்டி இந்த ஆட்டத்திலும் டிராவோ அல்லது வெற்றியோ கண்டிருந்தால் ஐ.எஸ்.எல். வரலாற்றில் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை படைத்திருக்கும். மயிரிழையில் அச்சாதனை நழுவிப் போனது. 

மும்பை சிட்டி அணி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 5-வது வெற்றியை ருசித்த கவுகாத்தி அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து