முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல்: விராட் கோலி 4வது இடம், ரஹானே 8-வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 862 புள்ளிகளுடன் விராட் கோலி 4-ஆம் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே ஒரு இடம் முன்னேறி 8 ஆம் இடம் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 919- புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2 வது மற்றும் 3 ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், லபுசேன் ஆகியோர் உள்ளனர். இந்திய அணி வீரர் புஜாரா 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் அஷ்வின் (8 ஆம் இடம்) மற்றும் பும்ரா (9ஆம் இடம்) உள்ளனர். 

ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 419- புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து