முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41 நாடுகளில் பரவியுள்ள தென் ஆப்ரிக்க கொரோனா வைரஸ்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : உருமாற்றம் பெற்ற தென் ஆப்பிரிக்க கொரோனா வைரஸ் சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். 

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ஐ.நா. சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தென்னாப்பிரிக்காவின் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் 47 நாடுகளை தாக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த வைரசுக்கு பெயர் பி1351. கடந்த அக்டோபர் மாதம் 2020ஆம் ஆண்டு இந்த வைரஸ் பரவத்துவங்கியது. டிசம்பர் 23ஆம் தேதி பிரிட்டனில் இந்த வைரஸ் இருவரைத் தாக்கியது. இதன்மூலமாக வெளிநாடுகளுக்கு இந்த வைரஸ் பரவத் துவங்கியது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி இந்த வைரஸ் மேலும் 10 நாடுகளுக்குப் பரவி தற்போது 41 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் இதன் பரவும் விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்து உருமாற்றம் பெற்ற தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸை அழிக்க வல்லது என்று முன்னதாக தகவலை வெளியிட்டது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குப்பிகளை குளிர் நிலையில் பயன்படுத்துவது பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் சாத்தியமற்றது.

இதற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆப்பிரிக்க நாடுகள் பல, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டன. பிரிட்டனின் தடுப்பு மருந்தான ஆஸ்ட்ராசெனேகா இந்த வகை வைரசை 90 சதவீதம் போக்கியது என அந்நிறுவனம் முன்னதாக தகவல் அளித்தது. ஆனால் இதற்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க உருமாற்றம் பெற்ற வைரஸின் பரவும் வேகம் அதிகம் என்பதைத் தவிர இதன் வீரியம் சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் அதிகம் என்பதற்கு எந்த மருத்துவச் சான்றோ, ஆராய்ச்சி முடிவுகளோ இன்று வரை இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து