முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு: உதவிகள் செய்ய பிரிட்டிஷ் தயார்: போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பலரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், நந்தாதேவி மலைச் சிகரத்தில், பனிப்பாறை உடைந்து, பனிச் சரிவு ஏற்பட்டது. இதனால், தவுலிகங்கை நதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் சிதைந்தது. இங்கு பணியாற்றிய, 125-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவு வருமாறு:

உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது. இந்தியாவுடன் பிரிட்டன் துணை நிற்கும்.

தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். இதேபோல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும், உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக 100 பேர் மாயமாகியுள்ளனர். எங்கள் சிந்தனை அவர்களைப் பற்றியே உள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து