முக்கிய செய்திகள்

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ஜல்லிக்கட்டு படம் இல்லை: ரசிகர்கள் ஏமாற்றம்

Jallikkattu 2021 02 10

Source: provided

சென்னை : ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இத்திரைப்படம் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. 

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் போட்டியிட்டது.

இந்நிலையில், அந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு படம் இடம்பெறவில்லை. இப்படம் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்பட்டியலில் கூட இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து