முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2-வது குழந்தைக்கு தந்தை ஆகிறார்

திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.

ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

ஹாரிக்கும் அவரது சகோதரர் வில்லியமுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. தற்போது ஹாரி - மேகன் மெர்கல் தம்பதியினர் தனியாக வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

ஹாரி தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2-வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இந்த செய்தியை ஹாரியின் செய்திதொடர்பாளர் காதலர் தினத்தன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். ஒரு மரத்தின் கீழ் புன்னகையுடன் நிற்கிறார்கள். அதில் மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து