முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் பிரதமர் மாளிகையில் 10 ஆண்டு சேவகம் செய்யும் பூனை

செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது.

இங்கிலாந்து பிரதமராக டேவிட் காமரூன் இருந்த போது அவரது அரசு வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக அவர் வீட்டில் ஒரு பூனை வளர்க்க விரும்பினார்.

ஒரு நாள் அவரது வீட்டின் அருகே மாநகராட்சி ஊழியர்கள் ஒரு வாகனத்தில் தெருவில் சுற்றி திரிந்த பூனைகளை பிடித்து செல்வதை கண்டார். அதில் இருந்து ஒரு பூனையை தன் வீட்டில் வளர்ப்பதற்கு கேட்டார்.

மாநகராட்சி ஊழியர்கள் வழங்கிய பூனை, அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனின் அரசு வீட்டில் வளர்ந்து வந்தது. அங்கு தொல்லை கொடுத்த எலிகளையும் பிடித்தது.

டேவிட் கேமரூனுக்கு பிறகு தெரசாமே பதவியிலிருந்தார். இப்போது போரீஸ் ஜான்சனும் பிரதமராக உள்ளார். ஆனால் பிரதமரின் வீட்டில் இருந்த பூனை மட்டும் மாறவேயில்லை. அந்த பூனை பிரதமர் வீட்டுக்கு சென்று நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிந்தது. இதனை பிரதமர் வீட்டு பணியாளர்கள் தெரிவித்தனர். பூனை வந்த பிறகு எலிதொல்லை குறைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து