முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக்கூடாது: வெள்ளை மாளிகை அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த மாதம் 20-ந் தேதி துணை அதிபராக பதவியேற்று கொண்டார்.

அவர் தனது துணை அதிபருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கமலா ஹாரிசின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ். இவர் பெண்களுக்கான ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவர் கமலா ஹாரிசின் பெயர் மற்றும் புகைப் படங்களை பயன்படுத்தி தனது நிறுவனத்தின் பொருட்களை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

வைஸ்-பிரெசிடென்ட் ஆண்டி என்ற ஆங்கில வாசகங்களுடன் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்வெட் சர்ட்கள் அதிகம் விற்பனையானது.

இது தொடர்பாக புகார்கள் வெள்ளை மாளிகைக்கு வந்தன. இதையடுத்து மீனா ஹாரிசுக்கு வெள்ளை மாளிகையின் சட்டக்குழு, அறிவுரை வழங்கி உள்ளது

அதில் வெள்ளை மாளிகையின் கொள்கைப்படி துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களின் வணிகத்தையோ, சமூக வலைத்தள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் மிக உயர்ந்த நெறிமுறைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து