முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வர்த்தக அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்ரிக்க பெண்

செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : கடந்த 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி வருகிறது. 164 உறுப்பினர்களை கொண்ட உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்றன. 

நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் யு மியங் -ஹீ ஆகியோர் இதற்கான போட்டியில் இருந்தனர். 

இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவியில் அமரும் முதல் ஆப்பிரிக்கர் மற்றும் முதல் பெண் என்னும் சிறப்பை நிகோஸி ஒகோன்ஜோ இவீலா பெற்றுள்ளார். 

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாகிய பொருளாதாரம் மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி உலகளாவிய பொருளாதாரம் மீண்டும் அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தெரிவித்துள்ளார். 

தற்போது 66 வயதாகும் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா, மொத்தம் 164 நாடுகளுடைய பிரதிநிதிகளால் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து