முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும்: அதிபர் ஜோ பைடன்

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேட்டி அளித்தபோது அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- 

இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் எங்களிடம் 600 மில்லியன் அளவுக்கு தடுப்பு மருந்து இருக்கும். இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமானது. குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப நான் விரும்புகிறேன். அடுத்த கிறிஸ்துமசுக்குள் நாம் மிகவும் மாறுபட்ட (இயல்புநிலை) சூழ்நிலையில் இருப்போம் என்றார். இதற்கு முன்பு ஜோபைடன் அனைவருக்கும் தடுப்பூசிகள் வசந்த காலத்துக்குள் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் தடுப்பூசிகள் கிடைப்பது மற்றும் அவற்றை வினியோகிப்பதற்காக சிரமங்களை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து