மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ .7 கோடிக்கு ஏலம் எடுத்தது

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      விளையாட்டு
Moin-Ali--2021-02-18

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது.கொரோனா சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 போ் இந்தியா்கள்; 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள்.292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். 

8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளன. 

அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

முக்கிய வீரர்கள் ஏல விவரம் வருமாறு: 

சிவம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இந்தியா ஆல்ரவுண்டரான இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 4.40 கோடி கொடுத்துள்ளது 

மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ .7 கோடிக்கு ஏலம் எடுத்தது 

கிளென் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. 

  • 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ரூ.14.25 கோடி 
  • 2020: பஞ்சாப் கிங்சுக்கு ரூ .10.75 கோடி 
  • 2019: டெல்லி அணிக்கு 9 கோடி ரூபாய் 
  • 2014: பஞ்சாப் கிங்சுகு 6 கோடி ரூபாய் 
  • 2013: மும்பை இந்தியன் அணிக்கு 1 கோடி ரூபாய் 

ஐபிஎல் -2020 இல் அவரது செயல்திறன்: இன்னிங்ஸ் - 11, ரன்கள் - 108, சராசரி - 101.9 

பிபிஎல் -2020 இல் அவரது செயல்திறன் : இன்னிங்ஸ் - 13, ரன்கள் - 379, சராசரி - 143.56 

அவர் இதுவரை மூன்று ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வங்காள தேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை ரூ. 3.2 கோடிக்கு வாங்கியது. 

20 ஓவர் போட்டிகளில் 1500-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 90-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் இவர். 

ஸ்மித்தை வாங்கியது டெல்லி அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது 

ஜேசன் ராய் கருணா நாயர், அலெக்ஸ் கெல்ஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ்,ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச், இந்திய அணியின் ஹனுமான் விஹாரி ஆகியோரை யாரும் ஏலம் எடுக்க வில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து