சி.எஸ்.கே. ஜெர்சியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்: புஜாரா

வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2021      விளையாட்டு
Pujara-2021-02-19

Source: provided

சென்னை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. ஒவ்வொரு முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் இவர் பெயர் இடம் பிடிக்கும். ஆனால் எந்த அணியும் இவரை கண்டுகொள்வதில்லை. கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. 

இந்த நிலையில்தான் தற்போது நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் சுமார் 7 வருடம் கழித்து மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் களம் இறங்க இருக்கிறார். 

ஐபிஎல் போட்டியில் விளையாட இருப்பது குறித்து புஜாரா கூறுகையில் மீண்டும் ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புவது சிறப்பு. உண்மையிலேயே சி.எஸ்.கே. ஜெர்சி அணிந்து விளையாடுவதை எதிர்பார்த்து இருக்கிறேன்.

மீண்டும் எம்எஸ் டோனியின் தலைமையின் கீழ் விளையாட இருக்கிறேன். நான் இந்திய அணியில் அறிமுகம் ஆகும்போது எம்எஸ் டோனி கேப்டனாக இருந்தார். எம்.எஸ்.டோனியின் கீழ் விளையாடிய சிறப்பான நினைவலைகள் உள்ளன. அவருடன் மீண்டும் இணைவதை எதிர்பார்த்து இருக்கிறேன். 

ஐ.பி.எல். பற்றி பேசும்போது, டெஸ்ட் போட்டி மனநிலையில் இருந்து மாற வேண்டும். முடிந்த அளவிற்கு எவ்வளது விரைவாக மாற முடியுமோ, அந்த அளவிற்கு மாற வேண்டும். சிறந்த தயார் படுத்துதலுடன் விரைவாக மாறுவது மனதளவை பொறுத்தது என உணர்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் என நான் மிகவும் நம்புவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து