முக்கிய செய்திகள்

செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம்: விஞ்ஞானிகளுக்கு ஜோ பைடன் பாராட்டு

Joe-Biden 2021 02 21

Source: provided

வாஷிங்டன் : பெர்செவரன்ஸ் ரோபோ ரோவர், சிவப்பு கிரகம் என்று சொல்லப்படுகிற செவ்வாய் கிரகத்தின் பழமையானதும், 3 லட்சம் கோடி அல்லது 4 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று விஞ்ஞானிகளால் கணிக்கப்படுகிற நதிப்படுகையின் அருகில் வெற்றிகரமாக தரை இறங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் பழங்கால வாழ்வின் தடங்களை தேடும், ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) பூமிக்கு திரும்புவதற்கான பாறைத்துகள்களை தேடும், 

இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள 25 அதிநவீன கேமராக்களும், 2 மைக்ரோபோன்களும் செயல்பட தொடங்கி விட்டன. 

இப்போது அந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் அதிர வைக்கிற காட்சி கொண்ட நெருக்கமான படத்தை நாசா வெளியிட்டு இருக்கிறது. 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார்.

நாசா அமைப்பின் நிர்வாகக் குழு தலைவர் ஸ்டீவ் ஜுர்சிக்கை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பைடன் வாழ்த்துகளைப் பகிர்ந்ததாக வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து