தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
jayakumar-2020 11 05

Source: provided

சென்னை : தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:- 

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் கட்சித் தலைமை தொகுதிப் பங்கீடு விவரத்தை முறைப்படி அறிவிக்கும் என்றார். 

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்து விடலாம்.

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருக்கிறது. தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து