முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையோருக்கு மார்ச் மாதம் தடுப்பூசி போடுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் இறுதி செய்யப்பட உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்தது.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணியை கடந்த 16-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இருந்தபோதிலும் மாநிலங்கள் தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் காட்ட வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

இதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

அதிக எண்ணிக்கையிலான சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலை உள்ளது. இதில் முன்னேற்றம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

டுத்த முன்னுரிமை பயனாளிகளான 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையோருக்கு மார்ச் மாதம் தடுப்பூசி போடுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் இறுதி செய்யப்படுகின்றன.

இனி வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பயன்பெறும் வகையில் தடுப்பூசிகளை போடுவதில் அதிக வேகம் காட்ட வேண்டும்.

தடுப்பூசி போடும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும். வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

மருத்துவ கல்லூரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகள், உட்கோட்ட ஆஸ்பத்திரிகள், சுகாதாரம் மற்றும் நல மையங்கள், சுகாதார துணை மையங்கள் ஆகியவற்றில் மார்ச் 1-ந் தேதி முதல் அனைத்து தடுப்பூசி போடும் நாட்களிலும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே மேற்கொள்வதற்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து