முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 140 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது: முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவாரூர் : ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் நேற்று 140 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் நடத்தி வைத்தனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் காமராஜ் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டும் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 140 ஜோடி மணமக்களுக்கு திருமணம் நேற்று காலை 9.30 மணிக்கு திருவாரூர் வண்மீகபுரம் அம்மா அரங்கில் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப்புடவை, வேட்டி, மற்றும் சீர்வரிசைப் பொருட்களாக குங்குமச்சிமிழ், குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 78 சீர்வரிசைப் பொருட்கள் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

திருமண விழாவிற்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், எம்.பி., தலைமை வகித்தார். இந்த திருமண விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று திருமணங்களை நடத்தி வைத்தனர்.

புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முகமதுஅஷரப் அனைவரையும் வரவேற்றார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறினார்.

திருமணத்தில் கலந்து கொண்ட மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் காலை மற்றும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவினை முன்னிட்டு 140 ஜோடிகளும் அமரக்கூடிய பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மணமக்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். மேலும் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அரங்கு முழுவதும் மணமக்களின் உறவினர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு அமர்ந்திருந்தனர்.

விழா ஏற்பாடுகளை அமைச்சரின் மகன் டாக்டர் இனியன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, நிர்வாகிகள் குமார், வாசுகிராமன், செந்தில், கலியபெருமாள் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

அமைச்சர் காமராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமிபத்தில் மருத்துவமனையில் இருந்து சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் தற்சமயம் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் பிறருக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கலந்து கொள்ளவில்லை. அவரின் சார்பாக அவரது துணைவியார் லதா உமாமகேஸ்வரி வந்திருந்து முன்னிலை வகித்து திருமண நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களை வாழ்த்தி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து