அசாமில் இயற்கை எரிவாயு திட்டங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      இந்தியா
Modi 2020 12 14 - Copy

Source: provided

கவுகாத்தி : பிரதமர் மோடி நேற்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சென்ற அவர் தேமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

இந்தியன் ஆயில் பொங்கைகான் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவின் ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் கம்ப்ரசர் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் தேமாஜி பொறியியல் கல்லூரியை திறந்து வைத்தார். சுவால்குச்சியில் அமைய உள்ள புதிய பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் அசாம் அரசு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுவதாக கூறினார். மேலும் மாநிலத்திற்கு பெரும் ஆற்றல் வளங்கள் இருந்தபோதிலும் முந்தைய அரசாங்கங்கள் பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து