அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      உலகம்
Gan 2021 01 02

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று மிசவுரி மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் லெஜியன் கிளப்பில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். 

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கேப் கிரார்டியுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து