நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      இந்தியா
Petrol-diesel-2021-02-22

Source: provided

நாகலாந்து : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகரிலும், மத்தியப் பிரதேசத்தின் அணுப்பூரிலும் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்து வாகன ஓட்டிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. 

இதையடுத்து, ராஜஸ்தான், மேகாலயா, அசாம் மாநிலம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு விலை குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகலாந்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளது. இந்த வரிக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது. 

நாகாலாந்து அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி ரூ.29 சதவீதத்திலிருந்து 25 ஆகவும், டீசல் மீதான வரி 17.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.22 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு 57 பைசா வரையிலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து