முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவத் திட்டத்தில் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று நேற்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:–

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முன்னணியில் இருந்து பொறுப்புடன் செயலாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நோய்த்தொற்றின் ஆபத்தை பொருட்படுத்தாமல், தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், பலர் பணிக்கு திரும்பினர். இந்த ஆண்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மிகப்பெரிய பங்களிப்பு அரசு ஊழியர்களால், ஒரு குழுவாக வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களின் முயற்சிகளை மாநில அரசு தொடர்ந்து அங்கீகரித்து வருகின்றது.

தற்போது செயல்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அன்று நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் இத்திட்டம் நீட்டிக்கப்படும். தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டுத் தொகையான 4 லட்சம் ரூபாய் 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டுத் தொகை 7.5 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மேலும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு, மொத்தம் 20 இலட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான நடைமுறைகள் மேலும் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து