மார்ச் 7-ம் தேதிக்குள் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு? - அசாமில் பிரதமர் மோடி சூசக தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      இந்தியா
Modi 2020 12 14

Source: provided

திஸ்பூர் : தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை  தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என்று  பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.  

பிரதமர் மோடி விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டிருந்தார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் பேசிய பிரதமர், அசாம், மேற்குவங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என்று சூசகமாக கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி மார்ச் 4-ம் நாள் அறிவிக்கப்பட்டது நினைவில் இருக்கிறது. எனவே மார்ச் மாத முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று யூகித்து இருக்கின்றேன்.

இந்த ஆண்டு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் முறையாக அறிவிக்கும். தேர்தலுக்கு முன்னதாக எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை, அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன். மார்ச் 7-ம் நாள் சட்டமன்ற தேர்தல் தேதிகள் வெளியாகலாம். அதுவரை எனக்கு நிறைய நேரம் இருக்கிறது என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சூசக தகவலை அடுத்து, அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து