தமிழகத்தில் நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Bass-2021-02-23

Source: provided

சென்னை : தமிழகத்தில் நாளை 25-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்காமல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பணி நிரந்தரம், அகவிலைப்படி உயர்வு, பணி சுமையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள், அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 3-வது கட்டமாக கடந்த 18-ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நாளை 25-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக தொ.மு.ச,ஏ.ஐ.டி.யு.சி,சி.ஐ.டி.யு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தேர்தலுக்கு முன்பாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து