முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிய கொரோனா தடுப்பூசி மையம்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

அபுதாபி : அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில், புதிய கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசியானது அமீரகம் முழுவதும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், புதிய கொரோனா தடுப்பூசி போடும் மையம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையமானது அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய மையத்தில் கொரோனா தடுப்பூசிகளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வார நாட்களில் போட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த மையத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட அமீரகத்தை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தடுப்பூசியினை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். இதில், நாள்பட்ட வியாதிகளை உடையவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.  இந்த தடுப்பூசி மையத்துக்கு வரும் பொதுமக்கள் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து விரைவாக வரும் வகையில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தடுப்பூசியை போடுவதற்கு முன்பதிவு செய்யவேண்டிய கட்டாயமில்லை. எனினும் அமீரக அடையாள அட்டையை பொதுமக்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அல் ஹொசன் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  அமீரகத்தின் தேசிய இலக்கின் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் வகையில் இந்த புதிய தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து