முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே போட்டி: ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்தூர் : விஜய் ஹசாரே போட்டியில் ஜார்க்கண்ட் அணியை தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. ஷாருக் கான் அபாரமாக ஆடி தமிழக அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஒருகட்டத்தில் 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் கீழ் நடு வரிசை வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். தொடக்க வீரர் பாபா அபராஜித் 57 ரன்களும் ஷாருக் கான் 51 ரன்களும் ஜே. கெளசிக் 55 ரன்களும் சாய் கிஷோர் 29 ரன்களும் முகமது 20 ரன்களும் எடுத்தார்கள்.

ஷாருக் கான், சாய் கிஷோர், முகமது ஆகியோர் தலா 3 சிக்ஸர்களும் கெளசிக் 2 சிக்ஸர்களும் அடித்து கடைசிக் கட்டத்தில் அதிக ரன்கள் எடுக்க உதவினார்கள். இதனால் தமிழக அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. 

இதன்பிறகு விளையாடிய ஜார்க்கண்ட் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தமிழக அணித் தரப்பில் எம். சித்தார்த் 3 விக்கெட்டுகளும் பாபா அபராஜித், ரகுபதி சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளும் முகமது, சாய் கிஷோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து