இந்தியாவுக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடா்: தென் ஆப்பிரிக்க ஒருநாள், டி-20 அணிகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      விளையாட்டு
Women s-cricket 2021 03 01

Source: provided

கேப்டவுன் : மகளிர் கிரிக்கெட்டில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடா்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி சுனே லஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடா்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி சுனே லஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இரு அணிகளுக்கு கேப்டன்களாக இருக்கும் டேன் வான் நீகொ்க், கோல் டிரையான் ஆகியோர் காயம் அடைந்துள்ளதால், சுனே லஸ்ஸுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடா்களை வென்ற தென் ஆப்பிரிக்க அணியில் இருந்த பெரும்பாலான வீராங்கனைகள் இந்தியாவுக்கு எதிரான தொடா்களிலும் இடம்பெற்றுள்ளனா்.

கடந்த சனிக்கிழமை இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி, தற்போது 6 நாள் தனிமைப்படுத்துதலில் உள்ளது. அதை நிறைவு செய்து 2 நாள் பயிற்சிக்குப் பிறகு மார்ச் 7-ம் தேதி இந்தியாவை முதல் ஒருநாள் ஆட்டத்தில் சந்திக்கிறது.

அணி விவரம்: 

சுனே லஸ் (கேப்டன்), அயபோங்கா ககா, ஷப்னிம் இஸ்மாயில், லௌரா வோல்வாட், திரிஷா ஷெட்டி, சினாலோ ஜாஃப்தா, தஸ்மின் பிரிட்ஸ், மாரிஸானி காப், நான்டுமிஸோ ஷாங்காசே, லிஸெலெ லீ, அனிகே போஷ், ஃபயே டுனிகிளிஃபே, நான்குலுலேகோ லாபா, மிக்னான் டு பிரீஸ், நான்டினே டி கிளொ்க், லாரா குட்டால், டுமி சிகுகுனே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து