தங்கத்தின் விலை சவரன் ரூ.34,000-க்கும் கீழ் குறைந்தது

Gold-price 2020-11-10

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.34,000-க்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதில் இருந்து அதன் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்திருந்தது. 

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ. 34,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238-க்கு விற்பனையானது.  சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,600 விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து