முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

புதிய பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி, எம்பி.,க்களின் அறையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட் என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பிரதமரின் புதிய இல்லம், பிரதமர் அலுவலகம் தெற்கு பிளாக் பகுதியில் வரவிருக்கிறது. துணை ஜனாதிபதி இல்லம் வடக்கு புறத்தில் இருக்கும். அதேபோல், தற்போது இருக்கும் போக்குவரத்து மற்றும் ஷ்ரம் சக்தி பவன்கள் இருக்கும் இடத்தில் எம்.பி.,க்களின் அறைகள் வரவிருக்கிறது. இந்நிலையில், புதிய பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி, எம்.பி.,க்களின் அறையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை அமைப்பதின் பின்னணியில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக இருக்கும். ஆனால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இத்தகைய இணைப்பு தேவையில்லை என்று கட்டிட வடிவமைப்பாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருவது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கும் புதிய பாராளுமன்ற வளாகத்திற்கும் இடையிலான தொலைவு காரணமாக கூறப்படுகிறது. வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பினால் பொதுமக்கள் புழக்கத்துக்கு இடையூறு ஏற்படுகிறது, இதைத் தவிர்க்கவே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு தயாராகும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து