முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

 கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.2-வது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஸ்விட்சா்லாந்தின் பெலின்டா பென்சிச்சை 6-4, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். கீஸ். மற்றொரு சுற்றில் ஜப்பானின் மிசாகா டோய் 6-4, 6-3 என்ற செட்களில் சீனாவின் ஜெங் சாய்சாயை வென்றார். 

செக் குடியரசின் கரோனா பிளிஸ்கோவா 2-6, 3-6 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவிடம் வீழ்ந்தார். டுனீசியாவின் ஆன்ஸ் ஜெபுா் 6-2, 6-2 என்ற நோ் செட்களில் ரஷியாவின் அனா பிலின்கோவாவை தோற்கடித்தார். ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் 7-6 (9/7), 7-6 (7/5) என்ற செட்களில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை போராடி வீழ்த்தினார். அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-3, 6-1 என்ற செட்களில் சீனாவின் வாங் கியாங்கை வென்றார்.

அரையிறுதியில் சானியா ஜோடிகத்தார் ஓபன் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிஸாஸ்லோவேனியாவின் ஆண்ட்ரியா கிளெபாக் இணை தனது காலிறுதியில் 6-2, 6-0 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 2-வது இடத்திலிருந்த கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/ரஷியாவின் அனா பிலின்கோவா ஜோடியை வீழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து