முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணாமுல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.  

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன. 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டார். 

அதில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது.  நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

திரிணாமுல்  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 50 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சமூகத்தை சேர்ந்த 42 பேர், 17 பழங்குடியினருக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து