2023 - சர்வதேச தினை ஆண்டு: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      இந்தியா
Modi 2021 03 05

Source: provided

புதுடெல்லி : தினை வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதனை ஆதரித்த உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

தினை வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை 70-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்தன. இதன் மூலம் தினை வகையால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிரிடும் முறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.

இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தினை வகைகளை பிரபலப்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது பெருமை. அதன் நுகர்வு ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனை மேலும் மேம்படுத்துகிறது. மேலும் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஸ்டார்ட்-அப் சமூகத்தினருக்கு தினை தொடர்பான ஆய்வு மற்றும் புத்தாக்க சாத்தியங்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஐ.நா.வில் தினை ஆண்டு அறிவிப்பு தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற பிரதிநிதிகளுக்கு ஒரு நொறுக்குத்தீனியாக சுவையான தினை முறுக்கு வழங்கப்பட்டதாகவும், இதை அனைவரும் முயற்சி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து