முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

122 புள்ளிகளுடன் முதலிடம்: ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது

சனிக்கிழமை, 6 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில்  இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது உறுதியாகி உள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் நோக்கில் ஐ.சி.சி. இந்த உலக டெஸ்ட் சாமியன்ஷிப் தொடரை நடத்துகிறது. 2019 முதல் 2021 வரையிலான சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளான இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வாகியுள்ளன. 

இந்த ரேஸில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மாதிரியான அணிகளும் இந்திய அணியுடன் மல்லுக்கு நின்ற நிலையில் இறுதியில் இந்தியா பைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதோடு 122 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து