முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உள்பட 4 நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை மார்ச் மத்தியில் நடைபெறும் என தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டோக்கியோ : இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி டோக்கியோவில் நடந்தது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக 4 நாடுகள் தரப்பிலான 3-வது பாதுகாப்பு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. 

இந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் மார்ச் மத்தியில் தொலைதொடர்பு மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். 

இந்த கூட்டத்தில் ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கொரோனா தடுப்பூசிகளை சீரான முறையில் வினியோகிப்பது மற்றும் பருவகால மாற்றங்களை எதிர்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 

கடந்த 2004-ம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றுக்கு பின் உருவாக்கப்பட்ட 4 நாடுகளை அடக்கிய கட்டமைப்பு ஆனது, தற்பொழுது மண்டல பாதுகாப்பு விசயங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இந்த கட்டமைப்பின் 4 தலைவர்களும் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இதுவாகும். 

கடந்த மாதம், இந்த 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஆன்லைன் வழியே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் உள்ள நிலையை மாற்றும் சீனாவின் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை நோக்கி பணியாற்ற ஒப்பு கொள்வது என்றும் முடிவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து