முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு மட்டும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. பா.ம.க.வுக்கு இணையாக 23 இடங்களை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பிடிவாதமாக இருந்ததே இதற்கு காரணமாக அமைந்து இருந்தது. அதேநேரத்தில் அ.தி.மு.க. சார்பில் 23 இடங்கள் ஒதுக்க முடியாது என்றும், 15 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.  இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்தது. 15 முதல் 20 இடங்களுக்குள் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தது. 

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்த சாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.வுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.  அந்த கட்சிக்கு 17 இடங்கள் வரை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க தலைமை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனுடன் ஒரு மேல்சபை எம்.பி. பதவியையும் கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்ததாக கூறப்படுகிறது.  

இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதுதொடர்பாக தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுதேர்தலையொட்டி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (9-ம் தேதி) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.  இந்த கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து