முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் எல்லாம் ஏமாற்று வேலை - எல்.முருகன் பேட்டி

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் எல்லாம் ஒரு ஏமாற்று வேலை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் தி.மு.க.வின் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் நடைபெற்றது. அதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில் தி.மு.க.வின் இந்த அறிவிப்புகள் குறித்து சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்தார். 

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக பேசிய அவர் மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என்ற பெயரில் மு.க,ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மனித கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அறிவிப்பு எல்லாம் ஒரு ஏமாற்று வேலை. விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தரப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார். ஏமாற்றுவதற்கு தி.மு.க.விடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்தது” என்று எல்.முருகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து