பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு ஜனாதிபதி ரூ.1 லட்சம் நன்கொடை

திங்கட்கிழமை, 22 மார்ச் 2021      ஆன்மிகம்
Ramnath-Govind 2021 03 10

பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூ. ஒரு லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் நேற்று திங்கள்கிழமை பூரியில் உள்ள ஜெகந்நாதா் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த அவர்கள் கோயில் வளர்ச்சிக்கு ரூ. ஒரு லட்சம் நன்கொடை அளித்தனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஜனாதிபதிக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து