முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 50 ஆயிரம் உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறவில்லை : உலக சுகாதார அமைப்பு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 1 லட்சத்து 3 ஆயிரத்தை எட்டியது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது 45 - வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதற்கிடையே, ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதாக சொல்லப்படுகிறது.

இதனால், மக்கள் மத்தியில் அதிர்வலைகள் எழுந்த நிலையில், அத்தகைய செய்திகளுடன் பரவிய வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து