முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிளில் வந்து வாக்கு அளித்த நடிகர் விஜய்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கருத்தை மக்களுக்கு தெரிவிக்கவும், வாக்களிப்பது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார்.

பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே சைக்கிளில் வந்ததாக அவரது ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பிறகு சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்ததால், ரசிகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜய் வீடு திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து