அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்: ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் ரத்து

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      விளையாட்டு
Badminton 2021 04 06

Source: provided

புதுடெல்லி : அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 

20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து இந்த 2 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து