இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் அம்பானி, அதானி

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Ambani-Adani 2021 04 07

Source: provided

சென்னை : 2021-ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து மூன்றாம் இடத்தில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், நான்காவது இடத்தில் அவென்யூ சூப்பர் மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து