திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Biplob-Kumar-Dev 2021 04 07

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதில் மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். தயவுசெய்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து