ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பெற முன்பதிவு அவசியம்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      தமிழகம்
Jimmer-hospital 2021 04 07

ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பெற வருகிற 9–ம் தேதி முதல் முன்பதிவு செய்வது அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹலோ ஜிப்மர் என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகே‌‌ஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

இதற்கான தொலைபேசி எண்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே வேளையில் மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகளுக்கும் எந்தவித முன்பதிவும் தேவையில்லை.

ஒருநாளைக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து