நடப்பு ஐ.பி.எல் சீசனில் 3 மைல்கற்களை அடைவாரா டோனி?

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      விளையாட்டு
Dhoni 2021 04 07

Source: provided

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி எதிர் வரும் ஐ.பி.எல் 2021 சீசனில் மூன்று மைல்கற்களை எட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனது தலைமையின் கீழ் 4-வது முறையாக டோனி சென்னை அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்யும் முடிவோடு களம் இறங்குவார் என தெரிகிறது. 

அதோடு இந்த சீசனில் தனிப்பட்ட முறையில் அவர் மூன்று மைல்கற்களை எட்டவும் முயற்சி செய்வார். அவர் படைக்க உள்ள சாதனைகள் என்ன?

5000 ரன்கள் 

ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் டோனி தற்போது 4632 ரன்களுடன் எட்டாவது இடத்தில் தற்போது உள்ளார். கூடுதலாக இந்த சீசனில் 368 ரன்களை சேர்பதன் மூலம் 5000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இணைவார். கோலி, ரெய்னா, வார்னர், ரோகித் ஷர்மா, தவான் ஆகிய வீரர்கள் 5000 ரன்களை ஐ.பி.எல் போட்டிகளில் கடந்துள்ளனர். 

250 சிக்சர்கள் 

ஐ.பி.எல் போட்டிகளில் டோனி 216 சிக்சர்களை பறக்க விட்டுள்ளார். எந்தவித கஷ்டமும் இல்லாதது போல கூலாக சிக்சர் பறக்க விடுவதில் டோனி வல்லவர். அதனால் கூடுதலாக 34 சிக்சர்களை அடிப்பதன் மூலம் 250 சிக்சர்கள் விளாசிய வீரர் ஆகலாம். தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் மற்றும் இரண்டாவது இடத்தில் டிவில்லியர்ஸும் உள்ளனர். இருப்பினும் இது கொஞ்சம் சவாலான காரியமாக பார்க்கப்படுகிறது. 

விக்கெட் கீப்பராக 150 டிஸ்மிஸ்ல்கள் 

விக்கெட் கீப்பராக 150 டிஸ்மிஸல்கள் செய்துள்ள முதல் வீரர் என்ற சாதனையை டோனி படிக்க உள்ளார். அந்த இலக்கை எட்ட அவருக்கு கூடுதலாக 2 டிஸ்மிஸல்கள் தான் தேவைப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து