முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். - பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்சுக்கும் கொரோனா!

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெங்களூரு : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு அதனை பின்பற்றியே அணியுடன் இணைய அனுமதி அளிக்கப்படுகிறது.  

இந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சேர்ந்த டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தொற்று அறிகுறிகள் இல்லாதநிலையில், டேனியல் சாம்ஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த  பெங்களூரு வீரர் பட்டிக்கல் தேவ்தத் கொரோனா தொற்று குணம் அடைந்ததையடுத்து அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் சாம்ஸ் ஆல்ரவுண்டர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து